Monday, October 02, 2006

முகத்தில் கரி அல்லது உவமைக் கருத்து !

இன்று அனானி ஒருவர் மின்மடலில் தான் எழுதி அனுப்பியதை (அவர் வலைப்பதிவர் இல்லை என்பதால்) என்னுடைய வலைப்பதிவில் இடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். "குட்டிக்கதை" வாயிலாக, அவர் கருத்தை சொல்லியிருப்பது சிறப்பு ! "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கில் இப்பதிவை இடுகிறேன் :)
****************************

""பூசிட்டாங்க...பூசிட்டாங்க"" என்றபடியே ப்ளூட் கண்னன் ஓடி வந்தான்

" என்னாடா பூசிட்டாங்க" பேப்பர் படித்துக் கொண்டிருந்த அப்பா கேட்டார்

"மூஞ்சீல கரி பூசிட்டாங்கப்ப " என்றான் ப்ளூட் கண்ணன்

" யார் மூஞ்சீலடா கரி பூசிட்டாங்க..யார் பூசுனது "

"அப்பா நம்ம தெருவுல சுதந்துரமா திரிஞ்சுக்கிட்டு இருந்த சின்னப்பசங்க மூஞ்சிலதாம்பா..பக்கத்து வூட்டு போலிஸ் மாமா பூசிட்டாரு"

"எதுக்குடா...எப்ப பூசுனாரு "

"அப்பா..இவனுங்க எப்ப பாத்தாலும் அவரைப் பாத்தா "குட் மார்னிங்" அப்படீன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சானுங்க..அவரு டேய்...தமிழ்ல வணக்கம் அப்படீன்னு சொல்லுங்க...நீங்களெல்லாம் தமிழ் நாட்டுல இருக்குறீங்க."அப்படீன்னாரு

" இவனுங்க...எங்களுக்கு இதுதான் டக்குனு வருது..சொல்ல சுளுவா இருக்கு...புடிச்சிருக்கு ...அப்படீன்னு சொல்லிட்டிருந்தாங்க...ஒரு நா அடிக்கப் போயிட்டாரு..அப்பவும் சொன்னதக் கேக்கல.. "

"சரி..இப்ப என்னாச்சு "

'அவரு பெரியண்ணன் ஊருலேந்து வந்திருக்காரு..அவரும் போலிஸ்காரர்தான்...அல்லா பசங்களையும் கூப்பிட்டு..பசங்களா தெனத்துக்கும் தமிழ்ல அழகா "வணக்கம்" அப்படீன்னு சொன்னா சொன்னவனுங்களுக்கு தெனமும் ஒரு ரூபா தருவேன்.நீங்களும் இனிப்பு வாங்கி சாப்பிடலாம் அப்படீன்னாரு.இதக் கேட்ட ரெண்டு பசங்க உடனே" வனுக்கோம் ஐயா " அப்படீன்னு தப்பு தப்பா சொன்னாங்க..அவரும் இப்பிடியாவது சொல்ல ஆரப்பிச்சுட்டாங்களேன்னு சொன்னவனுக்கெல்லாம் ஒரு ரூபா குடுத்தாரு. அதுனால முன்னால சொல்ல முடியாது , தெரியாதூன்னு சுத்திக்கிட்டிருந்தவன்...அவனுக பாவம் சொல்லாட்டி என்ன விடுருங்க.. அப்படீன்னு சொன்னவன் ஆல்லார் மூஞ்சிலையும் கரி பூசிட்டாருல்ல ..ஹா..ஹா..ஹா..ஹே..ஹே..ஹே"
என்று உருண்டு பிரண்டு சிரித்தான் ப்ளூட் கண்ணன்

" ஏன்டா...ஆப்சன் குடுத்தாரு..அது யாருக்கு தேவையோ..யாருக்கு ஒத்து வருதோ அவங்க எடுத்துக்கிட்டாங்க....இவருக்கும் ஏதோ தமிழ் மற்றும் தம்பி மானம் காத்த திருப்தி இருக்கும்...அந்தப் பையன்களுக்கும் யாரும் கட்டாயப் படுத்தலை ..காசு கிடைச்ச சந்தோசம் இருக்கும்....இதுல மூஞ்சில கரி எங்கடா வந்தது..வேன்ணா மெரட்டிப்பாத்த தம்பி போலிஸ் மூஞ்சில கரி அப்படீன்னு சொல்லு ஒத்துக்கலாம் "

" ஆ...அதெப்படி ...மொதல்ல தெரியாது...வராது...முடியாது...நல்லால்லை அப்படீன்னு சொல்லிக்கிடுல்ல திரிஞ்சானுங்க...இப்ப காசுன்னதும் டக்குனு மாறிட்டானே..அப்ப மொதல்ல சொன்னது பொய்தானெ...பொய் சொன்னவன் மூஞ்சில கரிதான?"

"டேய்...ரெண்டு வாரம் முன்ன அம்மாவுக்கு காச்சல்..டாக்டர்கிட்ட நாந்தான் கூட்டிக்கிட்டு போகணும். சனிக்கிழமை வேலைக்கு போகலை..மேனேஜர் கூப்பிட்டு சனிக்கிழமை வேலைக்கு வரலையின்னா..டிஸ்மிஸ் அப்படீன்னாரு..நானும் " யோவ் ...சனிக்கிழமை லீவு..லீவு நாள்ள என் பொண்டாட்டிய உடம்பு சரியில்லைன்னு டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறத நீ என்னா தடுக்குறது அப்படீன்னு சண்டை போட்டேன் .அடுத்து வந்த சனிக்கிழமையும் அம்மாவுக்கு சிக்குன் குனியா சரியாகலை. ஆனா அந்த சனிக்கிழமை வேலைக்கு வந்தா ரெண்டு நாள் சம்பளம் அதிகமா கிடைக்கும் அப்படீன்னாங்க..அதிகம் பணம் வந்தால் அம்மா மருந்துக்கு ஆகுமே..டாக்டர்கிட்ட சாயங்காலம் போகலாம் அப்படீன்னு முடிவு பண்ணி வேலைக்கு போயிட்டேன்...வேலைக்கு போனதுனால...உங்கம்மா காய்ச்சல் பொய்யீன்னு ஆயிடுமா...தேவைக்கேத்த மாதிரி முடிவெடுத்தேன்...காசு நம்மகிட்ட நிறைய இருந்திருந்தா இப்ப கூட வேலைக்கு போகாம உங்கம்மா கூட ஆஸ்பத்திரி போயிருப்பேன்" அது போலத்தாண்டா இது...இதைப் போய் பெருசா மூஞ்சில கரி...***ல சொறி அப்படீன்னு ஏண்டா சொல்லிக்கிட்டு திரியுற..போ..போ.போய் உருப்படியா வேலை இருந்தா பார் " என்ரார் அப்பா.

இவ்வளவு சொல்லியும் ப்ளுட் கண்ணன் குழப்பமாக " இல்லைப்பா...காலேல மூஞ்சில கரியப் பாத்தேன் " என்றான்

அப்போதுதான் அவனை நிமிர்ந்து பார்த்த அப்பா " அட..கரிக்கு பொறந்தவனே..நைட்டு தூங்கும் போது பக்கத்திலிருந்த வென்னித்தவலைய கட்டிப்புடிச்சிருக்க..அதுல இருந்த கரி ஓம்மூஞ்சில ஒட்டியிருந்துருக்கு...காலேல கண்ணாடில அதப் பாத்துட்டு " எதுக்க உள்ளவன் மூஞ்சில கரி " அப்படீன்னு இந்த ஆர்ப்பாட்டம் பண்ணுறயே..போ..போயி மூஞ்சிய கழுவிட்டு ...அடுத்தவனை குறை சொல்றதை நிப்பாட்டணும்....எனக்கு இனிமேலாவது நல்ல புத்திய குடு தாயி..அப்படீன்னு குலதெய்வத்தை கும்பிட்டுட்டு வேலையப்பாரு.போடா" என்றார்.

*** 237 ***

25 மறுமொழிகள்:

dondu(#11168674346665545885) said...

குழலிய வச்சுக் காமெடி பண்ணலையே நீங்க? :)))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஆகா .... இதுக்கு எதிர் பதிவா ?

http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_30.html

நல்லா பூசினப்பா கரியை ;)

said...

""நல்லா பூசினப்பா கரியை ;) """"

யாரு பூசுனது...யாராருக்கு தேவையோ அவங்களே எடுத்து பூசிக்கிறாப்புல இருக்குது....

கருத்து சுதந்திரம் மாதிரி செயல் சுதந்திரம் :)))

கதிர் said...

:)) ஹா ஹா ஹா

முத்துகுமரன் said...

//இன்று அனானி ஒருவர் மின்மடலில் தான் எழுதி அனுப்பியதை //

:-))

ஜயராமன் said...

இதில் இரண்டு விஷயங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

முதலாவது, தமிழில் பெயர் வைப்பதால் வியாபாரத்துக்கோ, விளம்பரத்துக்கோ எந்தவொரு நஷ்டமும் இல்லை. இதுவரை அப்படி ஒன்றும் தெரியவில்லை.

இரண்டாவது, பணத்திற்காக செய்யும் தொழிலாகையால், இவர்கள் பணத்திற்காக அவர்கள் "கொள்கை"களை ஈஸியாக மாற்றிக்கொண்டுவிடுவார்கள். உதாரணத்துக்கு, எல்லா படங்களிலும் "கலை" என்று வரவேண்டும் என்று ஒரு சட்டம் போட்டால், அதை நிச்சயமாக செய்வார்கள் என்றுதான் தோன்றுகிறது. இது கருத்து சுதந்திரத்துக்கு கிடைத்த வெட்ககேடு. கருத்து சுதந்திரம் என்பது காசுக்காக மாறும் சுதந்திரமாகி போனது.

மற்றபடி உங்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளத்தக்கவையே.

நன்றி

குழலி / Kuzhali said...

//இன்று அனானி ஒருவர் மின்மடலில் தான் எழுதி அனுப்பியதை (அவர் வலைப்பதிவர் இல்லை என்பதால்) என்னுடைய வலைப்பதிவில் இடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
//
அடேடே பாலா உங்களுக்கு ஏன் இத்தனை சிரமம் கொடுத்தார் அந்த அனானி, என் பதிவிலேயே பின்னூட்டம் போட்டிருந்திருக்கலாமே, நான் வேறு அனானி பின்னூட்ட வசதியெல்லாம் செய்து தந்திருக்கிறேன், பாவம் உங்களை சிரமப்படுத்திட்டார் அனானி, என் பதிவினால் விளைந்த பின் விளைவு தான் இது என்றால் அதற்காக உங்கள் சிரமத்திற்க்கு வருந்துகிறேன்.

பாலாவிற்கு மடல் அனுப்பின அனானி, நீங்கள் எனக்கும் கூட அனுப்பலாம், நானே என் பதிவில் போடுவேன், என் பதிவில் அனானி பின்னூட்ட வசதி கூட இருக்கே.

//மொதல்ல தெரியாது...வராது...முடியாது...நல்லால்லை அப்படீன்னு சொல்லிக்கிடுல்ல திரிஞ்சானுங்க...இப்ப காசுன்னதும் டக்குனு மாறிட்டானே..அப்ப மொதல்ல சொன்னது பொய்தானெ...பொய் சொன்னவன் மூஞ்சில கரிதான?"
//
அக்காங்... அது அது... அதே தான்....

said...

excellent. someone has to do like this to shut their mouths. well done. bravo.

enRenRum-anbudan.BALA said...

எதுக்கு ஸ்மைலின்னு சற்று சொல்லுங்களேன், முத்துக் குமரன் !

enRenRum-anbudan.BALA said...

*******
//இன்று அனானி ஒருவர் மின்மடலில் தான் எழுதி அனுப்பியதை //

:-))

************
எதுக்கு ஸ்மைலின்னு சற்று சொல்லுங்களேன், முத்துக் குமரன் !

முத்துகுமரன் said...

//எதுக்கு ஸ்மைலின்னு சற்று சொல்லுங்களேன், முத்துக் குமரன் ! /

காரணமே அதுதான். அனானி போதைக்கு நீங்க ஊறூகாய் ஆகிட்டங்களேனுதான் :-)

enRenRum-anbudan.BALA said...

//காரணமே அதுதான். அனானி போதைக்கு நீங்க ஊறூகாய் ஆகிட்டங்களேனுதான் :-)
//

நிச்சயம் அப்டியில்லை !

அனானிக்கும் "கருத்து சுதந்தரம்" உண்டல்லவா ;-))

enRenRum-anbudan.BALA said...

//குழலிய வச்சுக் காமெடி பண்ணலையே நீங்க? :)))))
//
சே, சே ! அப்படியெல்லாம் நான் பண்ணுவேனா :)) நன்றி.

அனானிகளுக்கு நன்றி.

குழலி, முத்துக்குமரன்,தம்பி,
வருகைக்கு நன்றி.

எ.அ.பாலா

said...

பாலாஜி அவர்களே


பதிவை பதிப்பித்தமைக்கு நன்றி...

பதிவனுப்பிய அனானி

said...

குழலி...


உங்கள் பதிவில் வந்து சொல்ல விழைவதை கண்டிப்பாக உங்கள் பதிவிலேயே இடுவேன்...நீங்கள் கருத்து சுதந்திரத்திற்கு முற்றிலும் மதிப்பளிப்பவர் என்பது எனக்கு தெரியும் :))) சொன்னது சீரியஸாக என்றாலும் தட்டச்சும் போது irany-யால் முறுவல் வந்து விட்டது..எனவே ஸ்மைலி...கோபிக்காதீர்கள்

இந்த கட் & பேஸ்ட்டினால் வரும் தொல்லை தாங்க முடிவதில்லை

""//மொதல்ல தெரியாது...வராது...முடியாது...நல்லால்லை அப்படீன்னு சொல்லிக்கிடுல்ல திரிஞ்சானுங்க...இப்ப காசுன்னதும் டக்குனு மாறிட்டானே..அப்ப மொதல்ல சொன்னது பொய்தானெ...பொய் சொன்னவன் மூஞ்சில கரிதான?"
//
அக்காங்... அது அது... அதே தான்.... """

இதுக்குதான் அப்பா உதாரணம் சொல்லி விளக்கியிருந்தாரே.. படிக்கலையா

நன்மனம் said...

//அடேடே பாலா உங்களுக்கு ஏன் இத்தனை சிரமம் கொடுத்தார் அந்த அனானி, என் பதிவிலேயே பின்னூட்டம் போட்டிருந்திருக்கலாமே,//

ஆகா அவருடைய பின்னூட்ட சுதந்திரம், தனி மடல் சுதந்திரம் எல்லாத்துக்கும் கரி பூசிட்டாங்களா!!!!!

அவரு எங்கயுமே பின்னூட்ட முடியலனு சொல்லலியே.... பதிவில இடுமாறு தான வேண்டுகோள் விடுத்துள்ளார்....

said...

குழலிக்கு ஆப்பு என்பது வேறு யாரும் வைக்க வேண்டியதில்லை. அதுவாக அங்கங்கே இருக்கும். அவராக அடிக்கடி போய் அதன் மேல் அமர்ந்து கொள்கிறார்.

said...

""ஆகா அவருடைய பின்னூட்ட சுதந்திரம், தனி மடல் சுதந்திரம் எல்லாத்துக்கும் கரி பூசிட்டாங்களா!!!!!

அவரு எங்கயுமே பின்னூட்ட முடியலனு சொல்லலியே.... பதிவில இடுமாறு தான வேண்டுகோள் விடுத்துள்ளார்.... """""

and
""குழலிக்கு ஆப்பு என்பது வேறு யாரும் வைக்க வேண்டியதில்லை. அதுவாக அங்கங்கே இருக்கும். அவராக அடிக்கடி போய் அதன் மேல் அமர்ந்து கொள்கிறார்""""

இந்த இரண்டு பின்னூட்டத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா...இல்லை எனக்கு தான் அப்படி தோன்றுகிறதா

enRenRum-anbudan.BALA said...

//உங்கள் பதிவில் வந்து சொல்ல விழைவதை கண்டிப்பாக உங்கள் பதிவிலேயே இடுவேன்...நீங்கள் கருத்து சுதந்திரத்திற்கு முற்றிலும் மதிப்பளிப்பவர் என்பது எனக்கு தெரியும் :))) சொன்னது சீரியஸாக என்றாலும் தட்டச்சும் போது irany-யால் முறுவல் வந்து விட்டது..எனவே ஸ்மைலி...கோபிக்காதீர்கள்

இந்த கட் & பேஸ்ட்டினால் வரும் தொல்லை தாங்க முடிவதில்லை
//
அனானி அய்யா,

போதுமய்யா ! தாங்க முடியல :)

ஒரு சின்னப் பிழை, அது Irany இல்ல, IRONY

enRenRum-anbudan.BALA said...

நன்மனம் ,

nanRi !

said...

//அவரு எங்கயுமே பின்னூட்ட முடியலனு சொல்லலியே.... பதிவில இடுமாறு தான வேண்டுகோள் விடுத்துள்ளார்.... """""

and
""குழலிக்கு ஆப்பு என்பது வேறு யாரும் வைக்க வேண்டியதில்லை. அதுவாக அங்கங்கே இருக்கும். அவராக அடிக்கடி போய் அதன் மேல் அமர்ந்து கொள்கிறார்""""

இந்த இரண்டு பின்னூட்டத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா...இல்லை எனக்கு தான் அப்படி தோன்றுகிறதா
//


இதுக்கெல்லாம் மூளைய கசக்கி பிழிஞ்சு, அனாலிசிஸ் செஞ்சு, மாட்டினவரை ஒரு வழி ஆக்கிடுங்க :)

said...

***********
ஆகா அவருடைய பின்னூட்ட சுதந்திரம், தனி மடல் சுதந்திரம் எல்லாத்துக்கும் கரி பூசிட்டாங்களா!!!!!
**********
:)))

said...

good post :)

said...

//குழலிக்கு ஆப்பு என்பது வேறு யாரும் வைக்க வேண்டியதில்லை. அதுவாக அங்கங்கே இருக்கும். அவராக அடிக்கடி போய் அதன் மேல் அமர்ந்து கொள்கிறார்.
//

அது ;-)

said...

Test :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails